Sathankulam Judgement | குற்றவாளிகளுக்கு தூ*கு கேட்ட பென்னிக்ஸ் குடும்பம் - இன்று `தண்டனை அறிவிப்பு'
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு தூ*கு கேட்ட பென்னிக்ஸ் குடும்பம் - தமிழகமே எதிர்பார்த்த `தண்டனை அறிவிப்பு' தருணம்
சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது கடந்த 2020-ம் ஆண்டு காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23ஆம் தேதி அதிரடி தீர்ப்பு வெளியாகியிருந்தது. தண்டனை அறிவிப்பதற்கு முன்பாக, குற்றவாளிகளின் உடல்நிலை மற்றும் நன்னடத்தை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் நேற்று விரிவான அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.
