சாத்தான்குளம் சம்பவம்... 3 உயிர்களை காத்த இருவரை கவுரவித்து... MLA கொடுத்த உறுதி
தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளத்தில் கிணற்றில் கார் விழுந்த சம்பவத்தில் 3 பேரின் உயிரைக் காப்பாற்றியவர்களை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் அழைத்துப் பாராட்டினார். விபத்தில் 5 பேர் உயிரிழந்த சூழலில் 3 பேரை அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த லூகாஸ் மற்றும் பாண்டி காப்பாற்றினர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நேரில் அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டிய ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்,,,, லூகாஸ் மகனின் கல்லூரி படிப்பிற்கு உதவுவதாகத் தெரிவித்தார்.
Next Story
