Sathankulam Case | சாத்தான்குளம் வழக்கு மேல்முறையீடு | ஹைகோர்ட் மதுரை அமர்வு அதிரடி
சாத்தான்குளம் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தும் மனு மீதான விசாரணையில் 9 பேருக்கும் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. மதுரை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இரட்டை தூக்கு தண்டனையை உறுதி செய்ய சிபிஐ மனு தாக்கல் செய்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் காணொலி மூலம் ஆஜராகினர். விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு, தண்டனை பெற்ற 9 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய வழக்கை ஒத்திவைத்தது
