Sankarankoil | கோயிலில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம்
சங்கரன்கோவிலில் பலத்த மழை பெய்த நிலையில், கோவிலில் தேங்கிய மழை நீரில் குடும்பத்தினருடன் நடந்து சென்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம் செய்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் வருஷாபிஷேக பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் மூர்த்தி, கோவிலில் அடிக்கடி மழை நீர் புகுந்து வருவது குறித்து அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
Next Story
