வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை : குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் கைது

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை : குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் கைது
Published on

சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், பள்ளப்பட்டி, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்திய போலீசார் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஜவகர், வளத்தி குமார்,பிளேடு செல்வம், சரவணன் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். ரவுடிகளை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com