பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி

சேலம் அருகே கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தியடைந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி
Published on
சேலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவரது மனைவி புவனேஷ்வரி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2014ல் திருமணம் நடந்தாலும் இதுவரை குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் புவனேஷ்வரிக்கு கவுதமன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தன் கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது மாமியார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த புவனேஷ்வரி தன் வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன் மகளிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், கவுதமன் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனேஷ்வரி பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com