உத்தரகாண்ட்டில் நடைபெற்ற தேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்று, பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு சேலம் மாவட்டம் இளம்பிள்ளை ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்காப்பு கலையான தேக்வாண்டா போட்டியில் பங்கேற்பதற்காக, இளம்பிள்ளை பகுதியில் இருந்து மொத்தம் ஆறு வீரர்கள் உத்தரகாண்ட் சென்றனர். அவர்களில், ராம்குமார், சக்திவேல் ஆகியோர் தங்க பதக்கமும், மற்ற நான்கு வீரர்கள் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.