"இது புது வண்டியா?" - கோவத்தோடு ஷோ ரூம் முன் திரண்ட உரிமையாளர்கள்

"இது புது வண்டியா?" - கோவத்தோடு ஷோ ரூம் முன் திரண்ட உரிமையாளர்கள்

நாமக்கல்லில், தகுதியற்ற லாரிகளை விற்பனை செய்ததாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் லாரி தயாரிப்பு கிளை செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கடந்த 2022ம் ஆண்டு,4021 என்ற எண் கொண்ட மாடல் லாரியை வாங்கி பயன்படுத்தினர். ஆனால் வாங்கிய ஆறு மாதத்தில் லாரிகள் தொடர்ந்து பழுதாக தொடங்கின. அதிர்ச்சியான உரிமையாளர்கள் பழைய லாரிகளை பெற்றுக் கொண்டு, புது மாடல் லாரிகள் தர வேண்டும் என நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்