தமிழக அரசின் ரூ.2,000 சிறப்பு நிதி : தகுதியானவர்களின் பட்டியல் தயார்

தமிழக அரசின் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் ரூ.2,000 சிறப்பு நிதி : தகுதியானவர்களின் பட்டியல் தயார்
Published on

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு தகுதியானவர்களை எப்படி கண்டறிய முடியும் என குழப்பம் நிலவி வந்தது. இதனை தெளிவுப்படுத்திய வருவாய்த்துறை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே உள்ளாட்சி துறையில் தயாராக இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து அந்த பட்டியலை பெற்று, நிதி ஒதுக்கியதும் 60 லட்சம் குடும்பங்களின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com