தமிழகத்தை அதிரவைத்த நெடுஞ்சாலை சம்பவங்கள் | போலீஸ் விடுத்த முக்கிய அலர்ட்

x

லாரி ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களில் லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தியிருக்கிறார்.

நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்ஃபோன் பறித்த சம்பவங்களை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதில், நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம், சுங்கச்சாவடி மற்றும் காவல் நிலையம் அருகில் லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும், மின் விளக்கு வெளிச்சம் உள்ள இடத்தில் மட்டுமே ஓய்வெடுக்க வேண்டும், முன்பின் தெரியாத நபர்கள் மீது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அல்லது அவசர உதவி எண் 100 க்கோ உடனடியாக தகவல் அளிக்க வேண்டுமெனவும் மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தி இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்