"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை" - MP தயாநிதி மாறன்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக, எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும் கொளத்தூரில் 4-வது முனையம் அமைக்கவும், திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் எனவும் கோரியதாக தெரிவித்த அவர், வடமாநில மாநிலங்களில், 74 வந்தே பாரத் ரயில்கள் உள்ள சூழலில் தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் ரயில்கள் போதுமானதாக இல்லை என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
Next Story
