"இரண்டாம் தொகுதி தேர்வை முழுமையாக தமிழில் நடத்த வேண்டும்" - ராமதாஸ்

அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
"இரண்டாம் தொகுதி தேர்வை முழுமையாக தமிழில் நடத்த வேண்டும்" - ராமதாஸ்
Published on

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்கு தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல எனவும் கூறியுள்ளார். தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தொகுதி தேர்வுகள் அடுத்தவாரம் தொடங்க இருக்கும் நிலையில், வினாத்தாள் தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com