மாநிலங்களவையில் 5 தமிழக எம்.பி க்களின் பதவிகாலம் நிறைவு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் 18 எம்பிக்கள் உள்ளனர்.
மாநிலங்களவையில் 5 தமிழக எம்.பி க்களின் பதவிகாலம் நிறைவு
Published on
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் 18 எம்பிக்கள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் 6 எம்பிக்கள் , தமிழக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட கே.ஆர்.அர்ஜூனன், வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், ரத்தினவேல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி. ராஜா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைந்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த திமுகவின் கனிமொழி, அதனை ராஜினாமா செய்து விட்டு தூத்துக்குடியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com