மதுக்கடைகள் திறப்பு: "ஆட்சி கனவை மறந்து விடுங்கள்" - நடிகர் ரஜினிகாந்த்

மதுக்கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த நேரத்தில் மதுக்கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். கஜானாவை நிரப்ப தயவு கூர்ந்து நல்ல வழிகளை பாருங்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com