ராஜபாளையம் : 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் உறவினர் கைது

ராஜபாளையம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் : 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் உறவினர் கைது
Published on

ராஜபாளையம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள செங்கல்சூளையில் ஓட்டுநராக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவரது உறவினரின் மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அப்பள்ளிக்கு சென்ற சுரேஷ்குமார், உதவி தொகை பெற புகைப்படம் எடுக்க, மாணவியை தன்னுடன் அனுப்புமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்கவே, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் தனது உறவினர் உதவியுடன் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று தவறான முறையில் நடக்க முயற்சித்ததுடன், செல்போனில் படம் எடுத்தும் மாணவியை மிரட்டியுள்ளார். அவரிடமிருந்து இருந்து தப்பி, வீட்டிற்கு வந்த மாணவி, உறவினர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com