தென்மேற்கு வங்க கடலில் திடீர் மாற்றம்.. சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை..!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கனமழையுடன் கூடிய வெள்ளப்பெருக்காக மாறி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி சென்ற நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய வானிலை மையம் தென்மேற்கு வங்க கடலில் டிசம்பர் 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் இன்று மாலை வானம் கரு மேககூட்டங்களுடன் இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென மிதமான சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்து இடி மின்னல் காற்று இல்லாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக கொட்டி தீர்த்தது.இம்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
