Rain | Rainyday | Flood | மழை நீரில் கலந்து வரும் கழிவுநீர்.. மிதக்கும் கடைகள்.. பொதுமக்கள் அவதி
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி மீன் சந்தைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஆற்றில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் குடிநீரால் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது குழித்துறை அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையின் உள்பகுதியில் உள்ள கழிவறைகளில் இருந்து வெளியேறி சேகரிக்கப்படும் கழிவுநீர் குழிகள் நிரம்பி கழிவுநீர் மேல்பகுதியில் தேங்கி நிற்கிறது இந்த கழிவுநீர் இன்று பெய்து வரும் மழைநீரில் கலந்து சாலை வழியாக வழிந்தோடி அருகில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான மீன் சந்தையில் கழிவுகளையும் சேர்த்து அடித்து வந்து தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது இதனால் தாமிரபரணி ஆற்று நீர் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற நீராக மாறி வருகிறது மேலும் இந்த ஆற்று தண்ணீரை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வீடுகளுக்கு குடிநீராக நகராட்சி நிர்வாகம் விநியோகித்து வருகிறது இதனை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் மேலும் சாலைகளில் ஓரம் கழிவுநீர் கலந்த தண்ணீர் பாய்ந்து செல்வதால் பாதசாரிகள் வணிகர்கள், வியாபாரிகள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
