Tamilnadu | Rain | தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - குளம் போல் காட்சியளிக்கும் சாலை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
திருவிடைமருதூர், தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில்
மழை நீர் தேங்கி, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
பரமக்குடி, ராமநாதபுரம்
பரமக்குடியில் பரவலாக மழை பெய்ததால் மாணவ மாணவிகள் குடைகளை பிடித்து கொண்டும், மழையில் நனைந்த படியும் பள்ளிகளுக்கு சென்றனர் .
திருவாரூர்
திருவாரூரில் மீண்டும் கனமழை பெய்ததால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் பருத்தி மற்றும் எள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
