

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை கைது செய்யக்கோரி இடதுசாரி மாணவர் அமைப்பினர் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்தனர்.