Private Schools | தமிழகம் உட்பட நாடு முழுவதும் பிரைவேட் ஸ்கூல்கள்.. வெளியான அதிர்ச்சி டேட்டா

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பிரைவேட் ஸ்கூல்கள்.. வெளியான அதிர்ச்சி டேட்டா

நாடு முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாடு முழுவதும் மூடப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. கடந்த 2023- 2024ம் ஆண்டில், 3 லட்சத்து 31 ஆயிரத்து108-ஆக இருந்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25ம் ஆண்டில், 3 லட்சத்து 39 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 5 ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2020- 2021 கல்வியாண்டில், 10 லட்சத்து 32 ஆயிரத்து 49 ஆக இருந்த எண்ணிக்கை, 2024-2025-ம் ஆண்டில் 10 லட்சத்து13 ஆயிரத்து 322ஆக குறைந்துள்ளதாகவும், 18 ஆயிரத்து 727 அரசு பள்ளிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2023 - 2024ம் ஆண்டில் 12 ஆயிரத்து 481-ஆக இருந்த நிலையில், 2024-2025ம் கல்வியாண்டில் 11 ஆயிரத்து 890-ஆக குறைந்துள்ளதாகவும், 591 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது தமிழகத்தில், 2020-21ம் கல்வி ஆண்டில், 37 ஆயிரத்து 589-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-2024 ம் ஆண்டு வரை 37 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2024-2025ம் ஆண்டில், 37 ஆயிரத்து 626-ஆக குறைந்துள்ளதாகவும், 46 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com