

தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பழைய நகைகள் வாங்கும் பிரிவில் லியோ ஜான், அம்ஜித் ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.
விற்பனைக்கு வரும் பழைய நகைகளை உருக்கி புதிதாக மாற்றும் போது அதிலிருந்து நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ஜோசப், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட சுமார் 150 சவரன் நகைகளை வியாபாரிகளிடம் விற்றது தெரியவந்துள்ளது.