தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?
Published on

இதனையடுத்து திமுக சார்பில் புதிதாக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின்போது ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கித் தருவதாக தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில் திமுக சார்பில் தொ.மு.ச. பொது செயலாளர் சண்முகம், தேர்தல் பணி குழு செயலாளர் செல்வகணபதி, முன்னாள் எம்பி கேசி பழனிசாமி யாரேனும் இருவருக்கு வழங்க வாய்ப்புள்ளது.

அதேசமயம் ஒரு இடத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக காங்கிரஸ் தலைமை கேட்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில், மீதம் ஒரு இடம் மட்டுமே தி.மு.க.வுக்கு இருக்கும். அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தி.மு.க. தலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்க இருக்கின்றது.

X

Thanthi TV
www.thanthitv.com