Poonamallee | அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு சென்னையில் பரபரப்பு
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில், சாலை விரிவாக்கத்திற்காக அதிமுக பிரமுகர் சதீஷ்குமாருக்கு சொந்தமான கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கட்டிடத்தில் வங்கி செயல்பட்டு வரும் நிலையில், கட்டிடம் இடிக்கப்பட்டதால் ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரமும் சேதம் அடைந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் சதீஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கட்டிடம் தொடர்பான ஆவணங்களை சதீஷ்குமார் காட்டிய பிறகு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்
Next Story
