நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தவர்கள் கைது

புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தவர்கள் கைது
Published on
புதுச்சேரி அருகே, இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, பாகூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், சேரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு முன் விரேதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரை கொலை செய்யும் நோக்கத்தில், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், முள்ளோடை பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட 8 பேரை போலீசார் மடக்கி பிடித்ததுடன், 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com