மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும், புதுச்சேரியில் வெண்கல சிலை அமைப்பது மற்றும் காரைக்கால் பகுதியில் புதிய சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது பற்றியும் புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கருணாநிதி பெயரில் இருக்கை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதற்கு, அவர் நன்றி தெரிவித்துள்ளார்.