``தமிழகத்தில் அரசியல் மாற்றம்''.. அரிவாள் மீது ஏறி நின்று பூசாரி சொன்ன அருள்வாக்கு
தேனி மாவட்டம், வாய்க்கால்பாறை கிராமத்தில் உள்ள பச்சமலை பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கோயில் பூசாரி சுருளிமலை அரிவாள் மீது ஏறிநின்ற படி அருள்வாக்கு கூறினார். அப்போது தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் எனவும், பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்ந்து , கேரளா தமிழகத்திற்கு இடையே எல்லையில் பிரச்சினை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்க வாய்ப்பு உள்ளது என அருள்வாக்கு கூறினார்.
Next Story
