கோயில் கொடியேற்ற விழாவில் திடீரென மயங்கி விழுந்த போலீஸ் -பதறிய பக்தர்கள்..பரபரப்பு
கொடியேற்ற விழாவில் மயங்கி விழுந்த காவலர்
சங்கரன்கோவில் ஆடித்தபசு கொடியேற்ற விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் நின்றிருந்த பக்தர்கள், முகத்தில் தண்ணீர் தெளித்து ஆய்வாளரை எழுப்பினர்.
பின்னர், கோவிலுக்கு வெளியே அழைத்துவரப்பட்டு காவல் ஆய்வாளருக்கு மருத்துவ முதலுதவி வழங்கப்பட்டது. அதிக பணிச்சுமை காரணமாக காவலர்களுக்கு இதுபோன்று உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் சுழற்சி முறையில் விடுமுறை வழங்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சக காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
