பாமக முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி
பாமக முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ்க்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இப்படி இருக்க மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அன்புமணி ராமதாஸ், அடுத்ததாக சேலத்திற்கு செல்கிறார். இந்த சூழலில், சேலம் பாமக எம்.எல்.ஏ அருள் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணியும், நெஞ்சு வலி காரணமாக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர், மூட்டு வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர் அறிவுரையுடன் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Next Story
