Perambalur | TVK Vijay | வெறும் 1 மணி நேரம்.. 2000 முத்தத்தால் விஜய்யை வரைந்த இளைஞர்
சிவப்பு நிறத்தால் 2000 முறை முத்தமிட்டு விஜய்யின் உருவம்
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதை வரவேற்கும் விதமாக தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மதியழகன், 6X8 அடியில் வடிவமைக்கப்பட்ட திரையில் சிவப்பு நிறத்தால் 2,000 முறை முத்தமிட்டு விஜய்யின் உருவத்தை வடிவமைத்துள்ளார். மேலும், 1 மணி நேரத்திற்குள் இந்த படைப்பை நிவர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த மதியழகன் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சட்டமேதை அம்பேத்கர், புரட்சி கலைஞர் விஜயகாந்த், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் உருவத்தை பல்வேறு விதங்களில் வடிவமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
