பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பந்தல் கிராமத்தில் ராஜா என்ற விவசாயி தமது வயலில் 200 கிலோ சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வைத்திருந்தார். இதனை நள்ளிரவில் வந்த கும்பல் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.