துரியோதனன் படுகளம் நிகழ்வை கண்டு களித்த மக்கள்.. தி.மலையில் கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரணை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. பீமன், துரியோதனன் வேடமணிந்த கலைஞர்கள் தத்ரூபமாக நடித்ததை காண வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Next Story
