Petrolbunk | Villupuram | "பெட்ரோலும் கிடைக்காதா..?" - காலையிலேயே கேனுடன் பங்க்-கில் குவிந்த மக்கள்
Petrolbunk | Villupuram | "பெட்ரோலும் கிடைக்காதா..?" - காலையிலேயே கேனுடன் பங்க்-கில் குவிந்த மக்கள் #petrolbunk #villupuram #petrol #petrol #thanthitv பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அதிகாலை முதல் கூட்டம் அலைமோதி வருகிறது. பெட்ரோல் தீர்ந்துவிடும் என்ற அச்சத்துடன் பங்கில் குவிந்து வரும் பொதுமக்கள், கேன்களில் பல லிட்டர் பெட்ரோலை வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு பங்கிலும் சுமார் 10,000 லிட்டருக்கு மேல் இருப்பு உள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என்ற அச்சத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் வாங்கி செல்லும் பொதுமக்கள். வாகனங்களுக்கு முதலில் பெட்ரோல் போடுங்கள், கேன்களில் பெட்ரோல் கொடுக்காதீர்கள் என வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் இருப்பு குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சதீஷ் கூறும் கருத்துகளை பார்க்கலாம்..
