வலி தாங்க முடியவில்லை - சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். திருமணமாகி மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். டிரைவராக பணியாற்றி வந்த குமாருக்கு கழுத்தில் கட்டி இருந்ததன் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து வலி தாங்க முடியவில்லை என மனைவியிடம் கூறிவந்த நிலையில் மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

