பங்குனி உத்திரத் திருவிழா | பழனியில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிப்பட்டனர். முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி வெள்ளித்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Next Story
