பழனி முருகன் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

பழனி முருகன் கோயிலில் 46 லட்சம் செலவில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சுமார் 46 லட்சம் ரூபாய் செலவில், 20 டன் எடையிலான மரத்தினால் தேர் செய்யப்பட்டது. இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நிகழ்ச்சி பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. இதனை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தனர். பக்தர்கள் பலரும் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்