தாகத்தை தணிக்கும் பழனி.. பரவசத்துடன் குளிர்ந்த பக்தர்கள்
பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு நீர் மோர் வழங்க நடவடிக்கை.
பக்தர்களின் தாகத்தை தணிக்கும் பழனி கோயில் நிர்வாகம்
பழனி முருகன் கோயிலுக்கு கோடை விடுமுறை துவங்கியதில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் நீர்மோர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. ரோப் கார் நிலையம் , வின்ச் நிலையம், மலைக் கோயிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களக்கும் நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது . மேலும் படி வழியாக மலைக்கோயில் செல்லும் பக்தர்களுக்கும் படிப்பாதையில் ஆங்காங்கே நீர்மோர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலில் தாகம் தீர்க்க கோயில் நிர்வாகம் நீர் போல் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பக்தர்கள் ஆர்வமுடன் நீர் முறை பருகி செல்கின்றனர். கோடை காலம் முடியும் வரையில் பக்தர்களுக்கு தினமும் நீர்மோர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
