இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதனை ஏவுகணைகள் கொண்டு தகர்ப்போம் என, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் அசீம் முனீர் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிந்து நதியில் இந்தியா ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும்,
இந்த விஷயத்தில் தக்க பாடம் புகட்டுவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
Next Story
