"பஹல்காம் தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கியிருக்கலாம்" - பொன்.ரா சந்தேகம்
பஹல்காம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் தங்கியிருக்கலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தமிழகத்தில் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், தமிழகம் வழியாக இலங்கை சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்று தெரிவித்தார். பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் தமிழகத்தில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
