"70 சவரனில் மிஞ்சியது 20 சவரன் தான்.."-HM வீட்டில் கை வைத்தவர் கொடுத்த அதிர்ச்சி
தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், ஏ.புதூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை 20 நாட்களாக தேடிவந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆரோக்கிய ஜான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 20 சவரன் நகையை மீட்டுள்ளனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
Next Story
