தொடரும் போர் பதற்றம் | இஸ்ரேல் அரசுக்கு எதிராக வெடித்த சொந்த நாட்டு மக்கள்
இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
காசாவில் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல் அவிவ் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
