Gas Stove Repair|பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம் - கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்த இருவரின் கோர முகம்

பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம் - கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்த இருவரின் கோர முகம்

பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம் - கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்த இருவரின் கோர முகம்.. மக்களே மிகமிக கவனம்

சென்னையில், பகலில் கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்வது போல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் கொள்ளையடித்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயராஜன் என்பவரது பூட்டிய வீட்டில் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்களும் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டன.

சிட்லபாக்கத்திலும் இதே பாணியில் திருட்டுகள் தொடரவே, போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ​அதில், பொத்தேரியைச் சேர்ந்த சிவா மற்றும் மறைமலைநகரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்வது போல் பூட்டிய வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைதான சிவா மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#gasstove #repair #tambaram #theft #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com