

ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், சொந்த ஊர் திரும்ப மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலித்தால் 10,000 ரூபாய் அபராதத்துடன், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இக்கட்டான இந்த சூழலில் தனியார் பேருந்து, மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.