மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Published on
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018ம் ஆண்டுக்கான, 436 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு 2017ம் ஆண்டு படித்த 12ம் வகுப்பு முடித்த மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பெற்றோர்களுடன் வந்தனர். தங்களுக்கு வழங்காமல், 2018ம் ஆண்டு முடித்த மாணவிகளுக்கு மட்டும் மடிக்கணினி வழங்குவதை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறிய மாணவிகள், அமைச்சர் ஆர்.பிஉதயக்குமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் பேசிய அமைச்சர், ஒரு வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என உறுதியளித்ததால் மாணவிகள் கலைந்து சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com