நிலத்தை பெற்று மகன் ஏமாற்றியதாக மூதாட்டி த*கொலை முயற்சி

நிலத்தை பெற்று மகன் ஏமாற்றியதாக மூதாட்டி த*கொலை முயற்சி
Published on

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

பவானி அடுத்துள்ள குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள், தனது கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் சக்திவேல், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சென்ட் நிலத்தை தானமாக பெற்று ஏமாற்றி விட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார், மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றி மீட்ட நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com