"இனி கொடைக்கானலில்.." | டூரிஸ்ட்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வனத்துறை

x

சுற்றுலா தளங்களை பார்வையிட ஒரே கட்டணம் அறிமுகம்

கொடைக்கானலில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு தனி தனியாக கட்டணம் வசூலித்த நிலையில், தற்பொழுது 4 இடங்களுக்கும் சேர்த்து ஒரே கட்டணத்தை வனத்துறையினர் வசூலித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், உள்ள குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய நான்கு சுற்றுலாதலங்களை காண டிக்கெட் வாங்குவதற்கு, மக்கள் நீண்ட நேரம் லைனில் காத்திருந்து நேரம் வீணாவதாலும், கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கிலும், நான்கு இடங்களுக்கும் ஒரே டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 10 ரூபாய் வீதம், 4 இடங்களுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ஒரே கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்