அகஸ்தியர் அருவி செல்ல கட்டணம் இல்லை - கொண்டாடும் மக்கள்
சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமாக கருதப்படும் அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் செல்ல நுழைவு கட்டணம் மற்றும் கார் பார்க்கிங் கட்டணத்தை வனத்துறையினர் வசூலித்து வந்தனர். இதனை எதிர்த்து அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளூர் மக்களிடம் பார்க்கிங், மற்றும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தீர்ப்பளித்தது. இது குறித்து தந்தி டிவிக்கு எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அளித்த பேட்டியில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
