நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது.
நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு
Published on
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் வழியாக கோவை செல்வோர், கெத்தை வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பாதையில் கேரளா மற்றும் கோவையில் இருந்து அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வழிவிடாமல் நின்ற அந்த யானை, பின்னர் வனப்பகுதிகளுக்குள் சென்றது.
X

Thanthi TV
www.thanthitv.com