புறா மூலம் வந்த செய்தி - ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரத்தை நடத்த திட்டம்?

x

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்க திட்டம்?

ஜம்மு காஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில், புறாவின் காலில் வைத்து அனுப்பப்பட்ட சீட்டில் ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கும் திட்டம் குறித்து குறிப்பு எழுதப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்.எஸ் புரா பகுதியை அடுத்த கட்மாரியான் எனும் பகுதியில் புறா ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்து சோதனை செய்த போது, இது தெரியவந்துள்ளது. இது குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஜம்மு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்த புறா பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்து வந்ததா? என்பது குறித்து காவல்துறையினரும் எல்லை பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்