நெல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய இளைஞர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி பிடித்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்ட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே வேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கியவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை லேசாக தடியடி நடத்தி போலீசார் விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்தனர். சில இளைஞர்கள் வாகனங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினர்.