முதலமைச்சருடன் புதிய எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏக்கள், சேலத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதலமைச்சருடன் புதிய எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
Published on
தமிழகத்தில், நடந்த முடிந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க வசம் இருந்த இரண்டு தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது. இதையடுத்து நாங்குநேரி எம்.எல்.ஏ நாராயணன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சேலத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இரண்டு எம்.எல்.ஏக்களும் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மரியாதையை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை முதலமைச்சரிடம் காட்டி புதிய எம்.எல்.ஏக்கள் வாழ்த்து பெற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com